Navigation (English)

United Nations Department of Economic and Social Affairs

quickly know sites traffic volumes   

மனித நேய பாதுகாப்பு ஆர்கனைசேஷன் ஒரு அறிமுகம்

          தனி மனிதர்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவது முதல் சமுதாயத்தின் குரல்வளை நெறிக்கும் மனித நேயத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் வரை தலையிட்டு உரிமை மீறலுக்காக குரல் கொடுத்து வருகிறது. மனித நேய பாதுகாப்பு ஆர்கனைசேஷன். எப்போதுமே மனிதர்கள் எந்த விஷயத்தை வேண்டுமானாலும் விட்டுக்கொடுத்து விடுவார்கள் ஆனால் தன் அடிப்படை மனித நேயத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அதற்காகவே மனித நேய பாதுகாப்பு ஆர்கனைசேஷன் போராடிக் கொண்டிருக்கிறது. அதற்கு இந்த சமுதாய மக்கள் ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். மக்களுக்காகத் தான் மனித நேய பாதுகாப்பு ஆர்கனைசேஷனை ஏற்படுத்தி அதனை ஒரு பொது நல அமைப்பாக செயல்படுத்தி வருகிறோம்.

          மனித நேய பாதுகாப்பு ஆர்கனைசேஷனின் பல்வேறு பிரிவுகளாக மாநில புரவலர்கள், மாவட்ட புரவலர்கள், வழக்கறிஞர்கள் அணி, பொறியாளர்கள் அணி, மருத்துவர்கள் அணி, தொண்டர்கள் அணி, தொழிலாளர்கள் பிரிவு, கல்வி பிரிவு, அரசுத் துறைப் பிரிவு, பெண்கள் சுய உதவிக்குழுபிரிவு என பல்வேறு பிரிவு அமைப்பாளர்களை கொண்டு சாதி, மத, இன வேறுபாடு இன்றி செயல்பட்டு வருகிறோம்.

மனித நேய பாதுகாப்பு ஆர்கனைசேஷன் சார்பாக ஏறத்தாழ 122 வழக்குகளை சந்தித்து மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு மற்றும் போதிய நிவாரணம் பெற்றுக் கொடுத்தும், பாதிப்படைய செய்தவர்களுக்கு தண்டனையையும் பெற்றுக் கொடுத்துள்ளோம். பெண் சிசுவதை தடுப்பு, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, கொத்தடிமைகள் மீட்பு, வரதட்சனை கொடுமை, பாலியல் பலாத்காரம், காவல்துறையின் மனித நேய மீறல், அரசுத் துறையில் மனித உரிமைகள் மீறல், மருத்துவ துறையில் மனித உரிமைகள் மீறல், தனியார் துறையில் மனித உரிமைகள் மீறல் மற்றும் பலதரப்பட்ட சமுதாயப் பிரச்சனைகளை கையில் எடுத்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஏழைகள் முதல் பணக்காரர்கள் வரை அனைத்து தரப்பிலும் மனித நேய மீறல்களை தடுத்து நிறுத்திக்கொண்டு வருகிறோம்.


உறுப்பினர் ஆவீர் !                                                                                                     மனித நேயம் காப்பீர் !!
         
developed by Madurai soft